நீலகிரி மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நீட்டிப்பு:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், "முதலாவது நீலகிரி புத்தகத் திருவிழா 2023"- 05.03.2023 அன்று மதிப்பிற்குரிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு, 14.03.2023 வரை சிறப்பாக நடைபெற்று வரும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவ, மாணவிகள், பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் நீலகிரி புத்தக திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் முதலாவது புத்தக திருவிழாவில் பல்வேறு புத்தக அரங்குகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்படுகிறது. மேலும் இந்த புத்தக திருவிழாவில் சிறப்பு அம்சங்களாக மிகவும் பழமை வாய்ந்த புத்தகங்கள் பொதுமக்கள் பார்வைக்காககாட்சிப்படுத்தப்பட்டதை உள்ளுர் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்நிலையில் இப்புத்தக திருவிழா 14.03.2023 செவ்வாய் கிழமையுடன் நிறைவு பெறுவதாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகளின் கோரிக்கைகளை ஏற்று நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்று வரும் நீலகிரி புத்தக திருவிழா கண்காட்சி அரங்குகள் மட்டும் 19.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது..
எனவே பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புத்தகங்களை வாங்கி, படித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment