தூரம் அதிகம் உள்ள இந்த பாதைக்கு மாற்றுப் பாதையாக ஊட்டியில் இருந்து தலைகுந்தாவிலிருந்து வலது புரம் திரும்பும் கல்லட்டி மலை பாதை உள்ளது 36 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட சாலை தூரம் குறைவு என்பதால் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர் விமானத்தை இயக்கிய பைலட் கூட இன்னோவா காரில் இந்த சாலையில் பயணித்து விபத்தில் சிக்கி உயிரிழந்தார் மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஆராய்ந்து இறுதியில் நீலகிரி மாவட்டத்தில் ஓட்டுனர் உரிமம் பெற்ற மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பதிவு எண் பெற்ற வாகனங்களை மட்டுமே இந்த சாலையில் அனுமதிப்பது என முடிவெடுத்து அனுமதித்தது
தற்பொழுது பேசும் தெய்வம் என புகழப்படும் சிறியூர் மாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் கல்லட்டி மலை பாதையில் வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளது நேற்று ஒரேநாளில் பிரேக் பிடிக்காமல் மூன்று விபத்துகள் நேர்ந்துள்ளது ஆகவே வாகனங்கள் காவல் துறை அறிவிப்புகள் கேட்டு நிதானமாக பயணித்து பாதுகாப்புடன் பயணத்தை தொடருமாறு தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment