மனித உரிமைகள் கழக தொழிற்சங்க சார்பி விழிப்புனர்வு கூட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 November 2022

மனித உரிமைகள் கழக தொழிற்சங்க சார்பி விழிப்புனர்வு கூட்டம்.


நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள தேவாலா  பகுதியில்அன்னை தெய்வானை தனியார் திருமணமண்டபத்தில் வைத்து மனித உரிமைகள் கழக தொழிற்சங்க சார்பி விழிப்புனர்வு  கூட்டம் சிறப்பாக  நடைபெற்றது.


பந்தலூரை அடுத்த தேவாலா பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து மனித உரிமை  கழக தொழிற்சங்க சார்பில் விழிப்புனர்வு  கூட்டம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மனித உரிமை கழக சாரதா தலைமை தாங்கினார். நிகழ்ச்சிக்கு வந்தோர்களை  கூடலூர் மாவட்ட செயலாளர் மும்தாஜ் வரவேற்று பேசினார்.


சிறப்பு  அழைப்பாளர்கள்  மனித உரிமை கழக தொழிற் சங்க மண்டல தலைவர் ரிசால், மண்டல செயலாளர் பாபு, தேவாலா கிராம நிர்வாக ஆய்வாளர் நந்தகோபால், உதவியாளர் ராஜீ மற்றும் மனித உரிமை கழக மாணவர் அணி, மாவட்ட செயலாளர்  ஸ்ரீஜித், துனைத் தலைவி சாரா, மகளீர் அணி  துனைத் தலைவி முத்துகன்னு,சுலைகா.  துனை ஒருங்கினைப்பாளர் தேவி மற்றும் உறுப்பினர்கள் கழந்துக்கொண்டனர்.


கூட்டத்தில் மனித உரிமை கழக நிர்வாகிகள் கூறுகையில் தமிழ் நாடு அரசு தொழிலாளர்கள் நல  வாரியம்  மூலமாக வழங்கக் கூடிய நிதி உதவிகள் உபகரனங்களை மனித உரிமை  கழக தொழிற்சங்க மூலமாக அரசு அதிகாரியிடம் எடுத்துச் சொல்லி அவர் களுக்கு பல சலுகைகளை பெற்று தருகிறோம் .

மேலும் அதிகளவு பேர்  ஆன்லைனில் விண்ணப்பம் பூர்த்தி செய்ய தெரியாமல் இருப்பதின் மூலம் இந்த பயன்களைப் பற்றி தெரிய வில்லை போதுமான விழிப்புனர்கள் கிடையாது இனிமேல் தயக்கமின்றி எங்களை அனுகுங்கள் உங்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்வோம் என்றார் .


மேலும் இந்த நலவாரியத்தில் அரசு பனியில் உள்ளவர்களும் தனியார் இடத்தில் வேலை செய்பவர்கள் சாலை ஓர வியாபாரிகள், கட்டிட தொழிலாளி பேக்கரிகளில் உள்ளவர் மளிகைக்கடை ,காய்கறி வியாபாரி, துனி கடை  எலக்றிசன்  புலம்பர் ,ஏசி மெக்கானிக் ,என அனைத்து  உடல் உழைப்பினர் அனைத்து தரப்பினர்  இந்த தொழிற் சங்கத்தின் இனையளாம் என்றார் .


மேலும்தொழில் வாரியம் மூலம் தொழிலாளர்  நல வாரியத்தில் கட்டிட தொழிலாளர்க்கு திருமணம், பிள்ளைகள் படிப்பு  உயர்கல்வி, இயற்கை மரணம், விபத்து மரணம், கல்லூரி படிப்பு, முதுமை பணம், பெற்றோர் ஈமசடங்கு , இது போன்றவை பெற்று தரப்படும்.


இந்த நலவாரியத்தில் இனை வதற்கு 100பேர் இரூந்தால் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்  மிக குறைவான நபர்கள் இருந்தால் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் என விறிவாக எடுத்து கூறினார் . இனி வரும் காலங்களிலும்  காலதாமதமாக இருந்து விடாமல் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளுங்கள் இதற்கு உதவியாக கிராம நிர்வாக அலுவலர் உள்ளார்.  மக்களுக்கு நீங்கள் சென்று எடுத்து கூறி அவர்களையும் இந்த நலவாரியத்திற்கு சேர்த்து விடுங்கள் என நலவாரியத்தின் இயக்குனர்கள் ரிசால் பாபு போன்றோர் கூட்டத்தில் எடுத்து கூறினார், இறுதியாக நல வாரியத்தின் துனை தலைவி முத்துகன்னு நன்றி கூறினார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad